மகிழ்ச்சியுடன் வில்லியாக நடித்த பிரணிதா

மகிழ்ச்சியுடன் வில்லியாக நடித்த பிரணிதா

1 mins read
680b3429-d3d4-4141-90e4-35b63c8a508c
-

ஜெய் நாயகனாக நடித்து மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'எனக்கு வாய்த்த அடிமைகள்'. இப்படத்தில் நாயகியாக நடிக்க பல நடிகைகளிடம் கேட்டும் நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. காரணம் கதைப்படி நாயகி, நாயகனைக் காதலித்து ஏமாற்றி வில்லத்தனம் செய்வது போன்ற வேடமாம். இறுதியாக நடிகை பிரணிதாவை அணுகியுள்ளனர் படக்குழுவினர். இந்தக் கதையைக் கேட்ட பிரணிதா, "இந்த மாதிரியான கதாபாத்திரத்தைத்தான் எதிர்பார்த்தேன்" என்று கூறி உடனே நடிக்க ஒப்புக் கொண்டாராம். அவரது நடிப்பு சிறப்பாக இருப்பதாகப் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். தற்போது 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படத்தில் நடித்து வருகிறார் பிரணிதா.