குரல் கொடுத்த தமிழ் நடிகர்கள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், அசோக் செல்வன் ஆகியோர் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இந்தாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்குத் தமிழகம் எங்கும் ஆதரவு பெருகி வருகிறது. இப்போட்டிக்கு கமல், சூர்யா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனுஷ், "ஜல்லிக்கட்டு தமிழர்களின் குரலிலும் அடையாளத்திலும் ஒருங்கிணைந்த அம்சம். நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன். நமக்கு ஜல்லிக்கட்டு தேவை" எனத் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தமது சமூக வலைத்தளப் பதிவில், "ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாசாரம், பண்பாடு. அதை மீட்க விரும்பும் பல கோடிப் பேரில் ஒரு தமிழ னாய் நானும்" என்று குறிப்பிட்டுள்ளார். 'கொம்புவச்ச சிங்கம்டா' என்ற பெயரில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அருண்ராஜா காமராஜ் இணைந்து உருவாக்கிய பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான புகைப்படத்தைச் சமூக வலைத்தளப் பக்கத்தில் தங்களுடைய முகப்புப் படமாக மாற்றியுள்ளார்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு மவுனம் காக்கும் நூதனப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.

"நம்ம ஊரில் பிறந்தவர்கள்கூட ஜல்லிக்கட் டுக்கு எதிராகக் கேள்வி எழுப்புகிறார்கள். "ஜல்லிக் கட்டுக்கு எதிராக பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? ஜல்லிக்கட்டுக்காகப் போராடும் இளைஞர்களைக் கண்டு பெருமைப்படுகிறேன். இளைஞர்கள் போராட என்ன அவசியம் உள்ளது? தமிழக போலிஸைவிட சிறந்த காவலர்கள் உலகில் யாரும் கிடையாது. ஆனால், அந்தக் காவல்துறை இளைஞர்களை அடிக்கிறது. தமிழர்கள் அனாதைகள் இல்லை, கேட்பதற்கு யாரும் இல்லை என நினைத்தீர்களா? ஜல்லிக்கட்டு குறித்து கேள்வி எழுப்ப வெளிநாட்டு அமைப்புக்கு என்ன அருகதை உள்ளது? பசுக்களைத் துன்புறுத்தி கறக்கப்படும் பாலைக் குடித்தவர்களே காளை மீதான அக்கறை பற்றிப் பேசுகின்றனர். எந்த மிருகத்தையும் துன்புறுத்தக்கூடாது என்றால் நீங்கள் எதையுமே சாப்பிட முடியாது," என்று சிம்பு கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!