‘முப்பரிமாணம்’ படத்தில் சாந்தனு

நடிகர் மட்டுமில்லை என்று இயக் குநர் விளக்கம் அளித்துள்ளார். சாந்தனு நடிப்பில் உருவாகி வெளிவரக் காத்திருக்கும் புதிய படம் 'முப்பரிமாணம்'. இயக்குநநர் கள் பாலா, கதிர் ஆகியோருடன் பணியாற்றிய அதிரூபன் என்பவர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். சிருஷ்டி டாங்கே, தம்பி ராமையா, அப்புக்குட்டி உள்ளிட் டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தி ருக்கிறார். இந்நிலையில், 'முப்பரிமாணம்' குறித்த சுவாரசியமான தகவல் களை இயக்குநர் அதிரூபன் பகிர்ந்துகொண்டுள்ளார். நம்முடைய வாழ்க்கையில் சரி, தவறு என இரு விஷயங்கள் இருக்கும். ஆனால், அதையும் கடந்து அவற்றால் ஏற்படும் விளை வுகளைச் சொல்லும் படம்தான் 'முப்பரிமாணம்'.

இதில் சாந்தனு மூன்று தோற்றங்களில் நடித்துள்ளார். அவரை இந்தப் படத்தில் வேறு விதமாகப் பார்க்கலாம். இப்படத்திற் காக அவர் ரொம்பவும் சிரத்தை எடுத்து நடித்துள்ளார். அவர் ஒரு நடிகராக மட்டுமில்லாமல், ஒரு தொழில்நுட்ப வல்லுநராகவும் வேலை பார்த்தார். "அதேபோல், இதுவரையிலான படங்களில் துருதுரு கதாபாத்திரங் களில் நடித்து வந்த சிருஷ்டி டாங்கே, இதில் பெரிய நடிகைகள் செய்ய வேண்டிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். ஜி.வி.பிர காஷ் இந்தக் கதை மீது நம்பிக்கை வைத்து இசையமைக்க ஒப்புக் கொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!