ஒரே நாளில் உச்சத்தை தொட்ட சிம்பு

தமிழ்த் திரையுலகம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எதுவுமே செய்யாத நிலையில் தனி ஒரு நபராக, நடிகர் சிம்பு களத்தில் குதித்து போராட்டத்தை அறிவித்து அதை நடத்தியும் காண்பித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை, இளைஞர்களைக் கவர்ந்துள்ளார். பெரும்பாலான மக்கள் திரையுலக நட்சத்திரங்களின் மீது பெரிய அளவில் மதிப்பு வைத்திருக்கின்றனர். ஆனால் திரையுலகைச் சேர்ந்தவர்கள் தங்கள் மீது அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்காக எதுவுமே செய்வ தில்லை. அவர்கள் படங்களில் கருத்துகளைச் சொல்வதுபோல் நடித்து, ரசிகர்களை ஏமாற்றி பணத்தைச் சம்பாதிப்பதிலேயே குறிக்கோளாக இருக்கிறார்கள்.

ஆதரித்து குரல் கொடுத்த கமல், சூர்யா போன்றோர் மத்தியில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி உரக்க குரல் கொடுத்து அதற்கான போராட்டம் நடத்த வலுவான ஆதரவு அளித்த சிம்பு ஒரே நாளில் உச்சத்தைத் தொட்டுள்ளார். இன்று இளைஞர்கள் மத்தியில் உயர்ந்தும் நிற்கிறார். நேற்று முன்தினம் 5 மணிக்கு சிம்புவின் அழைப்பை ஏற்று அவரது இல்லத்தின் முன்பும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் இளைஞர் கள் திரண்டு வந்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இது சிம்புவுக்கு மிகப்பெரிய மரியாதையை தகவல் தொழில் நுட்பத்தில் திறன் பெற்றவர்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!