பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'கருப்பன்' படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவரும் விஜய் சேதுபதி தனது அடுத்தடுத்த படங்களைக் கவனமுடன் தேர்வு செய்து வருகிறார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் ஆறு படங்கள் வெளியாகி சாதனையைப் படைத்தன. அதேபோல இந்த வருடக் கணக்கை தனது 'புரியாத புதிர்' படத்தின் மூலம் தொடங்கவிருக்கிறார் விஜய் சேதுபதி. தற்போது, 'ரேணிகுண்டா' புகழ் பன்னீர்செல்வம் இயக்கத்தில் 'கருப்பன்' படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் முறுக்கு மீசையுடன் விஜய் சேதுபதி நடிக்கிறார். படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரித்திகா சிங்கும் வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்க இருக்கிறார்கள்.
'கொம்பு' மீசையுடன் விஜய் சேதுபதி
1 mins read
-

