பாலியல் தொழிலாளியாக தன்‌ஷிகா

பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார் இளம் நாயகி தன்‌ஷிகா. தமிழ்த் திரையுலகில் ஒருசில நடிகைகள் துணிச்சலாக இந்த வேடத்தில் நடித்து தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். நடிகைகள் ஸ்ரீபிரியா, சரண்யா பொன்வண்ணன், சினேகா, அனுஷ்கா, சங்கீதா ஆகியோர் நடித்துள்ள இத்தகைய வேடத்தை தன்‌ஷிகாவும் இப்போது ஏற்றுள்ளார். ஆனால் இவர் விலைமாதுவாக நடித்திருப்பது திரைப்படத்தில் அல்ல. 25 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படத்தில். இதற்கு 'சினம்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.

ஆவணப்பட இயக்குநரான வங்காள நடிகை பிடிட்டா பேக்கும் தன்‌ஷிகாவுடன் இணைந்து விலை மாதுவாக நடித்துள்ளாராம். இந்தக் குறும்படத்தை லண்டனில் வசிக்கும் நேசன் திருநேசன் தயாரிப்பில் ஆனந்த் மூர்த்தி என்பவர் இயக்கி இருக்கிறார். இதற்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் வாழும் ஒரு விலை மாதுவை சந்திக்கிறார் ஆவணப்பட இயக்குநர் ஒருவர். அவருக்கு ஏற்படும் அனுபவங்களே இப்படத்தின் கதை என்கிறார் இயக்குநர் ஆனந்த் மூர்த்தி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!