கவனமாக இருக்கும் மனீஷா யாதவ்

தமிழில் 'வழக்கு எண் 18/9' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மனீஷா யாதவ். அதற்குப் பிறகு சுசீந்திரனின் இயக்கத்தில் 'ஆதலால் காதல் செய்வீர்' படத்தில் நாயகியாக நடிப்பில் முத்திரை பதித்தார். பின்னர் அவர் நடித்த 'ஜன்னல் ஓரம்', 'பட்டைய கெளப்பணும் பாண்டியா' போன்ற படங்கள் சரியாக வெற்றி பெறவில்லை. நடன இயக்குநர் தினே‌ஷுக்கு ஜோடியாக அவர் நடித்த 'ஒரு குப்பை கதை' வெளியாகவே இல்லை. இதனால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் 'திரிஷா இல்லனா நயன்தாரா' படத்தில் படுகவர்ச்சியாக நடித்து ரசிகர்களை சூடேற்றினார். இப்படம் பெரியளவில் வெற்றி பெற்றதால், அம்மணிக்கு வாய்ப்புகள் குவிந்தன.

அண்மையில் 'சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரியாக நடித்து, ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கிளுகிளுப்பேற்றினார். இந்நிலையில், மனீஷாவுக்கு பெங்களூரில் காதலர் ஒருவர் இருப்பதாகவும் விரைவில் அவரை ரகசியமாக திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதை அவர் மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. எனினும் எதன் காரணமாகவும் தன்னைத் தேடி வரும் பட வாய்ப்புகள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருக்கிறாராம் மனீஷா. மேலும், பெங்களூருவில் அழகு சாதனப் பொருட்கள், நவீன ஆடைகள் விற்கும் கடை ஒன்றையும் இவர் தொடங்கியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!