சுதந்திரம் கொடுங்கள்: பார்த்திபன் வேண்டுகோள்

விளம்பரக் கட்டுப்பாடுகள் தொடர்பாகத் தயாரிப்பாளர் சங்கம் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் பார்த்திபன். இவர் தயாரித்து, இயக்கி நடித்து வெளியாகியுள்ள படம் 'கோடிட்ட இடங்களை நிரப்புக'. சாந்தனு, பார்வதி நாயர் உள் ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் 'பைரவா'வுடன் இணைந்து வெளியாகியுள்ளது. குறைவான திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், தன் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்த்திபன் தயாரிப்பாளர் சங்கத் தின் மீதிருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். "தமிழகத்தில் இருக்கும் ஆயிரம் திரையரங்குகளில், 800ல் 'பைரவா' வெளியாகியுள் ளது. மீதமுள்ள இருநூறு திரை யரங்குகளில்தான் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' வெளியாகி யுள்ளது. 'பைரவா' போன்ற பெரிய படத்தோடு வெளியாகும் போது, முழுப்பக்க விளம்பரம் கொடுக்க வேண்டியுள்ளது.

'கோடிட்ட இடங்களை நிரப்புக'வில் பார்வதி, பார்த்திபன், சாந்தனு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!