ஜல்லிக்கட்டை மையப்படுத்தி படம்

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி விரைவில் படம் எடுக்கப்போவதாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார். சேவல் சண்டையை மையப்படுத்தி இவர் இயக்கிய 'ஆடுகளம்' தேசிய விருது பெற்றது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுப் பிரச்சினையை மையமாக வைத்து ஏதாவது படம் எடுக்க வாய்ப்பிருக்கிறதா என்று வெற்றிமாறனிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ஜல்லிக் கட்டு என்பது பாரம்பரியமான நிகழ்வு என்றும் அதை உரிய விதிமுறைகளுடன் நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

"மிருக வதைக்காக ஜல்லிக்கட்டைத் தடை செய்வதென்றால் தீபாவளிக்கு வெடிக்கின்ற பட்டாசையும் விநாயகர் சதுர்த்திக்கு கடலில் சிலைகள் கரைப்பதையும்தான் நாம் முதலில் தடை செய்ய வேண்டும். "நான் சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடி வாசல்' என்ற நாவலின் உரிமையை வாங்கி வைத்துள்ளேன். அதைப் படமாக்குவேன்," என்கி றார் வெற்றிமாறன். இயக்குநர் அமீரும் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி 'சந்தனத்தேவன்' என்ற படத்தைத் தொடங்கியிருக்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!