வில்லியாக நடிக்கும் ஆண்ட்ரியா

விஷாலுக்கு எதிராக கே.பாக்யராஜும் ஆண்ட்ரியாவும் கூட்டணி அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் 'துப்பறிவாளன்'. இதில் விஷாலுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார். மேலும், பிரசன்னா, வினய் ராய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கே.பாக்யராஜ் இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இவருடன் இன்னொரு வில்லி வேடத்தில் ஆண்ட்ரியாவும் நடிக்க உள்ளாராம்.

ஆண்ட்ரியா நடிக்கப் போவதாக ஏற்கெனவே கூறப்பட்டது என்றாலும், தற்போது அவர் வில்லியாக நடிக்கப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. வில்லி என்பதால் இவருக்கு இப்படத்தில் அடிதடிக் காட்சிகள் உள்ளனவாம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'துப்பறிவாளன்' முதல் சுவரொட்டி பொங்கல் தினத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தை விஷால் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!