இயக்குநராகும் சேதுபதி

இயக்குநராகும் சேதுபதி

1 mins read
e1102713-9fb2-47ee-ae0a-a14dad56562d
-

கடந்த ஆண்டு அதிகப் படங்களில் நடித்த கதாநாயகன் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் உருவாகியுள்ள 'புரியாத புதிர்' படம் விரைவில் வெளியீடு காண உள்ளது. "என்னை மெருகேற்றிக்கொள்ள நிறைய வழிகள் இருக்கின்றன. நிறையப் படங்கள் பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றால் மெருகேற்றிக்கொள்ள முடியும் என நினைக்கிறேன். இளைஞர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று சில விஷயங்களை அறியச் சமூக வலைத்தளமும் உதவுகிறது. "தற்போது கேமராவும் மின்னணு மயமாகிவிட்டதால் நிறைய சுதந்திரம் இருக்கிறது.

இயக்குநர் சொல்வது, எனக்குத் தோன்றுவது என இரண்டையுமே எடுத்துப் பார்ப்போம். எது நன் றாக இருக்கிறதோ, அதை அப்படியே படத்தில் வைத்துக் கொள்வார்கள்." படம் இயக்குவீர்களா? "முழுக் கதைகளாக இல்லா மல், நிறைய ஒருவரிக் கதை களாக எழுதி வைத்துள்ளேன். எனக்குத் தைரியம் வரும்போது இயக்குநர் விஜய் சேதுபதியைப் பார்க்கலாம்," என்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.