“சந்தானமும் நானும் மீண்டும் இணைவோம்”

''கடந்த ஆண்டைப் பொறுத்த வரை, நான் மிகவும் மெனக்கெட்டு நடித்த 'கெத்து' சரியாகப் போக வில்லை. ஆனால் எனக்கு மிகவும் நல்ல பெயரையும், லாபத்தையும் சம்பாதித்துக் கொடுத்த படம் 'மனிதன்'. அப்படம் கொடுத்த உற்சாகத்தோடு 2017இல் ரசிகர் களை மகிழ்விக்க 'சரவணன் இருக்க பயமேன்' படத்தோடு களமிறங்கிவிட்டேன். வெற்றி நிச்சயம்," என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் உதயநிதி ஸ்டாலின். எழில், இயக்குநர் உதயநிதி கூட்டணியிடம் என்ன எதிர் பார்க்கலாம்?

"எழில் இயக்கிய கடைசி மூன்று படங்களின் பாணியிலேயே இப்படமும் இருக்கும். நான் நடித்த படங்களில் அமானுஷ்ய சக்தி இதுவரை இடம்பெற்றதில்லை. "அது உட்பட இதுவரை நான் நடித்த படங்களில் இல்லாத பல விஷயங்கள் இப்படத்தில் இருக்கின்றன. ஆனால் அதை வைத்து பய முறுத்தாமல் நகைச்சுவையாகச் செய்திருக்கிறோம். இந்தப் படத்துடன் சேர்ந்து மூன்று படங்களில் சூரியுடன் நடித்து வருகிறீர்கள். ரசிகர்க ளுக்குப் போரடித்துவிடாதா? "அதற்கு வாய்ப்பே இல்லை. முதலில் இயக்குநர் கௌரவின் படத்தில்தான் இருவரும் ஒப்பந்தமானோம். ஆனால் மூன்று படங்களுமே வெவ்வேறு கதா பாத்திரங்களில் சூரி வருகிறார்.

'சரவணன் இருக்க பயமேன்' படத்தில் எனக்கு வில்லன், 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில் எனது நண்பர், இயக்குநர் கௌரவ் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம். 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில் அவருடைய பாத்திரத்தில் வேறு யாரும் நடிக்க முடியாது. மூன்று படத்திலுமே கூடவே வருகிற நண்பர் கதாபாத்திரம் என்றால் கண்டிப்பாக போரடித்திருக்கும். இருவருமே யோசித்து, பேசித்தான் மூன்று படங்களையுமே செய்தோம். படங்களை வாங்கி விநி யோகிப்பதிலிருந்து முற்றாக விலகிவிட்டீர்களா? "இப்போதும் நிறைய படங் கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். தற்போது படம் வாங்கி வெளியிடாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் சினிமா துறை அந்தளவுக்கு மோசமாகப் போய்விட்டது. தற்போது படம் தயாரித்து வெளியிடுவதே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

95 விழுக்காடு படங்கள் தோல் வியடைகின்றன. திருட்டு வீடியோ, பண மதிப்பு நீக்கம் உள்ளிட்டவையால் சினிமாவுக்குக் கடும் பாதிப்பு. எனக்குப் பிடித்து, வணிக ரீதியாக இந்தப் படம் நல்லா போகும் என்று தெரிந்தால் மட்டுமே செய்வோம். உங்களுடைய நண்பர் சந்தானம் பெரிய நாயகனாக வளர்ந்துவிட்டார். அவருடன் மீண்டும் நடிப்பீர்களா? "கண்டிப்பாக. உதயநிதி படம் என்றால் கண்டிப்பாக நடிப்பேன் என்று சொல்லி இருக்கிறார் சந்தானம். மறுபடியும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' மாதிரியான படம் செய்ய முடியாது. அவரும் ஒரு பெரிய நடிகராக வந்துவிட்டார். அதற்கான பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது. நடக்கும் என நம்புகிறேன். "இனிமேலும் என் படங்களுக்கு வரிச்சலுகை கிடைக்காவிடில் நீதி மன்றத்தை அணுகுவேன்," என்கி றார் உதயநிதி ஸ்டாலின்.

'சரவணன் இருக்க பயமேன்' படத்தில் உதயநிதி, ரெஜினா

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!