'மதுரை சம்பவம்' படத்தை இயக்கிய யுரேகா தற்போது 'சிவப்பு எனக்குப் பிடிக்கும்' படத்தை இயக்கு கிறார். பாலியல் குற்றங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இதில் 'போராளி' மூலம் புகழ் பெற்ற சாண்ட்ரா ஏமி நடித்துள்ளார். அமிஷ் யுவானி இசையமைத்துள்ளார். "தமிழகம் மட்டுமல்லாது, வட மாநிலங்களிலிருந்தும் வேலை தேடி சென்னைக்கு வரும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் தங்களது உணர்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். இதனைத் தடுக்க பாலியல் கல்வியை ஊக்குவித்து ஆபாசமின்றி இப்படத்தை எடுத்திருக்கிறோம். சென்னையில் ஐடி நிறுவன பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்ட பல குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற குற்றங்களைக் குறைக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தைத் தணிக்கைக் குழு பாராட்டியுள்ளது," என்கிறார் இயக்குநர் யுரேகா.
'சிவப்பு எனக்குப் பிடிக்கும்'
1 mins read
-

