இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த லாரன்ஸ்

ஜல்லிக்கட்டுத் தொடர்பாக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டத்திற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஆரம்பத்திலிருந்தே தனது முழு ஆதரவை தெரிவித்து வருவதோடு சென்னை மெரீனா கடற்கரையில் அலைகடல் எனத் திரண்டிருக்கும் போராட்டாக்காரர்களுக்கு நேரடியாகச் சென்று தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். "நான் இந்த நிலைக்கு வருவதற்கு இந்த ரசிகர்கள்தான் காரணம். அவர்கள் கொடுத்த பணத்தை அவர்களுக்கே செலவிடத் தயாராக இருக்கிறேன். "மெரீனா கடற்கரையில் போராடும் இளைஞர்களுக்காக ஒரு கோடி செலவு செய்யவேண்டும் என்றாலும் செய்யத் தயார்," என்று கூறி அவர்களுடன் போராடிக்கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் போராட்ட களத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் களத்தில் இறங்கி போராடி வருகின்றனர். அவர்களுக்கு கழிவறைகள் இல்லாததால் கழிவறை உள்ள 5 கேரவன்களை ராகவா லாரன்ஸ் நடித்து வரும் 'சிவலிங்கா' படத்தின் தயாரிப்பாளர் கொண்டு வந்து மெரீனா கடற்கரையில் நிறுத்தி இருக்கிறார். லாரன்ஸின் வேண்டுகோளுக்கு இணங்க அதை அனுப்பி வைத்ததாக 'சிவலிங்கா' படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்தார். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறேன்,

போராட்டம் செய்கிறேன் என்று மாணவர்களிடம் நல்மதிப்பை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் திரையுலகினர் மத்தியில் இளைஞர்களோடு சேர்ந்து தானும் இதுபோன்று களத்தில் இறங்கி வேலை செய்யும் ராகவா லாரன்ஸை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நான்கு நாட்களாக தொடர்ச்சியாக லாரன்ஸ் கலந்துகொண்டதால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!