மதுமிதா: கதாநாயகர்களின் சிபாரிசு தேவை

தமிழ் சினிமாவில் இன்று குறிப் பிடத்தக்க நகைச்சுவை நடிகைக ளில் ஒருவராக வளர்ந்திருக்கிறார் மதுமிதா. கைவசம் ஒரு டஜன் படங்களை வைத்துள்ளார். எப்படிப் போகிறது சினிமா வாழ்க்கை? "விஜய்யுடன் 'ஜில்லா', 'புலி', கார்த்தியுடன் 'காஷ்மோரா' எனப் பெரிய நடிகர்களுடன் நடித்ததை நினைத்தால் மகிழ்ச்சியாக உள் ளது. இடையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் கொஞ்சம் இடை வெளி ஏற்பட்டு, அதன் பிறகு தொடர்ந்து நடித்து வருகிறேன். "இப்போது 'கொஞ்சம் கொஞ் சம்' என்ற படத்தில் நடித்துள்ளேன்.

அதில் அப்புக்குட்டிக்கு ஜோடி நான்தான். நகைச்சுவை மட்டு மில்லாமல் அந்தப் படத்தில் அழு திருக்கிறேன். அழுதுகொண்டே வசனம் பேசி, நடனமும் ஆடியது மறக்க முடியாத அனுபவம். இது வரை பார்க்காத ஒரு மதுமிதாவை அந்தப் படத்தில் பார்க்கலாம்.'' சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை... அந்தப் பயணம் குறித்து? "தொலைக்காட்சித் தொடர், இதர நிகழ்ச்சிகளில் நடித்தால், அது ஒளிபரப்பாகும்போது, அதைப் பார்க்கிற மக்கள்,

'ஹே... இந்தப் பெண்தானே அது...' என்று நம்மை ஆச்சரியமாகப் பார்ப்பார் கள். சின்னத்திரையை விட்டு விலகிப் போய்விட்டால் நம்மை யாருக்கும் அடையாளம் தெரியாது. "அதுவே சினிமாவில் நடிக் கும்போதோ, அந்தப் படத்தை எத் தனை ஆண்டுகள் கழித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பினா லும், நம்மைப் புதிதாய்ப் பார்க்கிற மாதிரிதான் இருக்கும். அதனால் சினிமாவுக்குத்தான் முன்னுரிமை தருகிறேன். கதாநாயகர்கள் நகைச்சுவை நடிகைகளைச் சிபாரிசு செய்தால் நன்றாக இருக்கும்," என்கிறார் மதுமிதா.

'கொஞ்சம் கொஞ்சம்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் அப்புக்குட்டி, மதுமிதா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!