ஜல்லிக்கட்டுக்கு நயன்தாரா ஆதரவு

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு நயன்தாரா தன்னுடைய ஆதரவை அளித்திருக்கிறார். நேற்று முன்தினம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்துக்கு அவர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். கறுப்பு நிறத்தில் மேலாடை அணிந்து, முகத்தைக் கறுப்புத் துணியால் மூடியபடி எந்தவித ஒப்பனையும் இல்லாமல் அவர் போராட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக "இளைய தலைமுறை யின் பலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுவிட்டது. கடந்த சில நாட்களாக தமிழகம் கண்டு வரும் எழுச்சி வரலாற்றில் இல்லாதது என்று சொல்லலாம். இந்தத் தரு ணத்தில் பிறப்பால் இல்லாவிட்டாலும், உணர்வாலும் உள்ளத்தாலும் நானும் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவள் என்னும் பெருமை என்னைத் தலைநிமிர வைக்கிறது.

"இளைய தலைமுறையின் இந்த போராட்டம் அமைதியான முறையிலே நடப்பது நம்மை பெருமைப்பட வைக் கிறது," என ஜல்லிக்கட்டுக்கு ஆதர வாக நயன்தாரா அறிக்கைவிட்டது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!