‘நல்ல படங்களில் நடிக்க ஆசை’

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 'சவரக்கத்தி' மூலம் தமிழ் சினிமா வில் மறுபிரவேசம் செய்துள்ளார் பூர்ணா. படம் பெரிதாகப் பேசப் படவில்லை, வசூலிலும் சாதிக்க வில்லை என்றாலும் பூர்ணாவுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. "இந்தப் படத்தில் நான் நடித்தது என் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். ஒரு நாள் இயக்குநர் மிஷ்கின் அலுவலகத்தில் இருந்து எனக்கு தொலை பேசி அழைப்பு வந்தது. 'இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக, காது கேட்காத கர்ப்பிணி கதாபாத்திரத்தில் நடிக்க எனக்குச் சம்மதமா?' என்று கேட்டார்கள். "மிஷ்கின் இயக்கும் படத் தில் கவனிக்கப்படாத கதாபாத் திரம் என்று ஒன்று இருக் காது.

பத்து பேர் நடித்தாலும் அனைவருக்குமே முக்கியத் துவம் இருக்கும். அந்த நம் பிக்கையில், கதையைக் கேட் காமல் அதில் நடிக்க உடனே ஒப்புக்கொண் டேன்." பொதுவாக கதாநாய கிகளுக்கு அம்மாக்கள் தான் ஆதரவு. உங்கள் வீட்டில் எப்படி? "நான் சிறு வய தில் இருந்தே நட னம் கற்றுக்கொண் டேன். இந்த நட னம்தான் நான் சினிமாவில் ஈடுபட உறுதுணையாக இருந்தது. நான் நன்றாக நடனம் ஆடுவேன், நன்றாக நடிப்பேன் என்று கண்டுபிடித்தது என் அம்மாதான். அவர் இல்லாமல் நான் இல்லை. நான் திரைத்துறையை விட்டுப் போனாலும், எனக்குக் குழந்தைகள் பிறந்தாலும், மறக்க முடியாத பொக் கிஷமாக 'சவரக்கத்தி' படம் இருக்கும் என நம்புகிறேன்," என்கிறார் பூர்ணா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!