தள்ளிப்போனது சூர்யாவின் 'சிங்கம் 3' படத்தின் வெளியீடு

தள்ளிப்போனது சூர்யாவின் 'சிங்கம் 3' படத்தின் வெளியீடு

1 mins read
50aa1009-4522-40a0-baf9-eb098696a90d
-

சூர்யா, ஷ்ருதிஹாசன், அனுஷ்கா ஆகியோர் நடிப்பில் 'சிங்கம்' படத்தின் தொடர்ச்சியாக மூன்றாவது பாகமாக உருவாகியிருக்கும் 'எஸ் 3' படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இப்படம் இம்மாதம் வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டங்கள் முடிவுக்கு வந்த பின்பும் இயல்பு நிலை திரும்பாததால் படம் வெளியிடுவதைத் தள்ளிவைப்பதாகவும் வெளியீட்டுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் படத் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. விவேக், சூரி, ராதாரவி உள்ளிட்டோரும் நடித்துள்ள இப்படத்தை ஹரி இயக்கி இருக்கிறார்.