பிந்து மாதவியை மணக்கிறார் வருண்மணியன்

பிந்து மாதவியை மணக்கிறார் வருண்மணியன்

1 mins read
9a1bbc12-587a-4d6e-958a-bc83d24c27bf
-

தொழில் அதிபரும் படத் தயாரிப்பாளருமான வருண்மணியன் நடிகை பிந்து மாதவியும் விரைவில் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது. நடிகை திரிஷாவும் தொழில் அதிபர் வருண் மணியனும் காதலித்து வந்தனர். நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் திருமணம் நடைபெறவில்லை; இருவரும் பிரிந்துவிட்டனர். "திருமணத்திற்குப் பிறகு வருண் மணி தன்னை நடிக்கவேண்டாம் என்று கூறியதால்தான் திருமணத்தை நிறுத்தினேன்," என்று திரிஷா பிரிந்ததற்கான காரணத்தைக் கூறினார். திரிஷாவை பிரிந்த பிறகு வருண் மணியன் நடிகை பிந்து மாதவியைக் காதலித்து வருகிறார். இருவரும் கட்டிப்பிடித்து நிற்கும் புகைப்படத்தைப் பிந்து மாதவி சமூக வலைதளத்தில் வெளியிட்டார். கோலிவுட்டில் பெரிய ஆளாகவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பிந்து மாதவிக்கு வாய்ப்புகள் எதுவும் சரியாக அமையவில்லை. அதனால் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் பிந்து மாதவி.