சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள `சி3' படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போனது. இந்நிலையில் `போகன்' படம் முன்னதாக வெளியாக உள்ளது. லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்சாமி நடித்துள்ள படம் `போகன்'. இப்படத்தை பிப்ரவரி 2ஆம் தேதியில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளது. முன்னதாக இப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சூர்யாவின் `சி-3' படம் தள்ளிப்போனதால், போகன் முந்திக்கொண்டதாகத் தெரிகிறது. மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் ஜெய், பிரணிதா நடித்துள்ள 'எனக்கு வாய்த்த அடிமைகள்' படமும் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 'சி-3' படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள நிலையில் பல்வேறு காரணங்களால் அந்தப் படம் திரைகாண்பது தொடர்ந்து பலமுறை தள்ளிப்போகிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான தேதியைப் படக்குழு பலமுறை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெயம் ரவியின் 'போகன்'
1 mins read
-

