தமிழகத்தில் நிலவிய மின்வெட்டு பிரச்சினையை மையமாக கொண்டு உருவாகி உள்ள ஜனரஞ்சகமான திரைப்படம் 'கனவு வாரியம்'. திரைக்கு வரும் முன்பே ஏழு உலக விருதுகளையும் 9 நாடுகளில் இருந்து பாராட்டுகளையும் பெற்றுள்ளது இப்படம். உலகப் புகழ்ப் பெற்ற 'ரெமி' விருதுகளை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் 'கனவு வாரியம்' என்கிறார் அதன் இயக்குநர் அருண் சிதம்பரம். மேலும், இந்தியா முழுவதும் வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ், தென்னிந்திய திரைப்படம் 'கனவு வாரியம்' என்பது குறிப்பிடத்தக்கது. இதன், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதியதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார் அருண் சிதம்பரம்.
திரைகாணும் முன்பே 7 விருதுகளைப் பெற்ற 'கனவு வாரியம்'
1 mins read
-

