பேருந்து ஓட்டி அசத்திய ராதிகா

பேருந்து ஓட்டி அசத்திய ராதிகா

1 mins read

90களில் முன்னணி நடிகர்களுக்கு கதா நாயகியாக நடித்து பலரின் மனதைக் கொள்ளையடித்த நடிகைகளுள் ஒருவர் ராதிகா சரத்குமார். தற்போது ராதிகா, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'இப்படை வெல்லும்' படத்தில் சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் உதயநிதியின் அம்மாவாக வரும் ராதிகா, பேருந்து ஓட்டுநராகவும் நடித்துள்ளார். பேருந்து ஓட்டுநராக வரும் காட்சிகளில், "ஓட்டுநர் இருக்கையில் நீங்கள் அமர்ந்தால் போதும். மற்றவற்றை கிராஃபிக்ஸ் மூலம் சரிசெய்து கொள்ளலாம்," என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதனை மறுத்த ராதிகா, பேருந்து ஓட்ட 10 நாட்கள் பயிற்சி பெற்றாராம். பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு பேருந்தை ஓட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினாராம். இது மற்ற இளம் நடிகை, நடிகைகளுக்கு நல்ல முன்னுதாரணம் என்கிறார்கள் படக்குழுவினர்.