சந்தானத்துக்கு ஜோடியாக கயல் ஆனந்தி

1 mins read
ca5ad524-9b47-4cb7-b406-3508f2233ce2
-

ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ராஜேஷ் இயக்கத்தில் வெளியான 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'ஆல் இன் ஆல் அழகு ராஜா', 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' உள்ளிட்ட படங்களில் சந்தானம் நகைச்சுவையில் அசத்தி இருந்தார். ராஜேஷ், சந்தானம் கூட்டணி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சந்தானத்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க ராஜேஷ் முடிவு செய்துள்ளார்.

முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் தயாராக உள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதில் சந்தானம் ஜோடியாக ஆனந்தி அல்லது நிக்கி கல்ரா ணியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கிறதாம்.