இயக்குநர்கள் மீது குற்றச்சாட்டு 'கபாலி' படத்தில் ரஜினியின்

இயக்குநர்கள் மீது குற்றச்சாட்டு 'கபாலி' படத்தில் ரஜினியின்

1 mins read
433c63ad-b46f-4dd8-a0fc-f29601618d78
-

மனைவியாக நடித்தவர் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. "தற்போது தமிழ் இயக்குநர்கள் யாரும் நாயகிகளை மதிப்பதில்லை. நாயகர்களுக்கு மட்டும் ஐந்து நட்சத்திர ஹோட்டலிலும் நாயகிகளுக்கு சாதாரண ஹோட்டலிலும் தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். நாயகர்கள் தாமதமாக வந்தால் அவர்கள் ஒன்றும் சொல்வதில்லை. நாயகிகளுக்கு மட்டும் அவ்வாறு வரக்கூடாது என்று சட்டம் போடுகிறார்கள். நான் அனைவரையும் குறை கூறவில்லை. 'கபாலி' படத்தில் நடித்தபோது ரஞ்சித், ரஜினிகாந்த் இருவரும் என்னை மிகுந்த மரியாதையோடு நடத்தினார்கள். ஆனால் மற்ற படங்களில் பணியாற்றுவது ஒரு கசப்பான அனுபவமாக இருக்கிறது," என்று குற்றம்சாட்டுகிறார் ராதிகா ஆப்தே.