விஜய் ஆண்டனியின் அண்ணாத்துரை

விஜய் ஆண்டனியின் அண்ணாத்துரை

1 mins read
363d9264-54f6-4e2d-8020-d605f08df5d2
-

விஜய் ஆண்டனி தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் தலைப்பையும் வித்தியாசமாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். யாரும் தேர்ந்தெடுக்கத் தயங்கும் தலைப்புகளைத் தன்னுடைய படத்துக்குத் தலைப்பாக வைத்து அதில் வெற்றியும் பெற்று வருகிறார். அந்த வரிசையில் 'பிச்சைக்காரன்', 'சைத்தான்' ஆகிய படங்கள் விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தன. அடுத்ததாக இவர் நடித்துள்ள 'எமன்' படமும் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் ஆண்டனி அரசியல்வாதியாக நடிக்கிறார். தன்னுடைய அடுத்த படத்திற்கு மறைந்த திமுக தலைவர் 'அண்ணாதுரை'யின் பெயரைத் தலைப்பாக வைத்துள்ளதாக கூறுகிறார். இப்படத்தை ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார்.