விஜய் நடிப்பில் வெளியான 'பைரவா' படத்தில் பணியாற் றியவர்களுக்கு அவர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். விஜய் நடிப்பில் அண் மையில் வெளிவந்துள்ள 'பைரவா' படம் வெற்றிநடை போட்டு வருகிறது. இரண்டு வாரங்களைக் கடந்தும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டி ருக்கும் நிலையில், இப்படக் குழுவினருக்கு விஜய் இன்ப அதிர்ச்சி ஒன்றைக் கொடுத்துள்ளார். அதாவது, 'பைரவா' வெற்றிக்கு வித்திட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் விஜய் தனது சொந்த செலவில் தங்கச் சங்கிலி, மோதிரம் பரிசளித்துள்ளார். இது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. இப்படத்தைப் பரதன் இயக்கியிருந்தார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். படத்தின் வசூல் நன்றாக இருப்பதை அறிந்த விஜய், அதற்குக் காரணமானவர்களைக் கௌரவிக்க நினைத்தாராம்.
விஜய் அளித்த திடீர் பரிசு
1 mins read
-

