'வேதாளம்' படத்தில் அஜித் பேசிய வசனம் 'தெறிக்க விடலாமா'. பெரும் வரவேற்பு பெற்ற இந்த வசனத்தை நகைச்சுவைக்காக அப்படியே தலைகீழாக மாற்றி, 'சிரிக்க விடலாமா' என்கிற தலைப்பில் ஒரு படம் உருவாகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தில் நிதின் சத்யா, பவர்ஸ்டார் சீனிவாசன், விநாயக் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக லீஷா, புதுமுக நாயகி சௌமியா, தீபா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். முக்கியமான கதாபாத்திரங்களை ஆனந்தராஜ், மகாநதி சங்கர், சந்தானபாரதி, கோவை செந்தில் ஆகியோர் ஏற்றுள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளரான ஜெயக்குமார், இசையமைப்பாளராகவும் கூடவே நடிகராகவும் அறிமுகமாகிறார். மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை எழுதி, பாடி இருப்பவரும் இவரே. கதை, வசனம் எழுதி இயக்குபவர் காவியன்.
மூன்று நாயகர்கள், நாயகிகளுடன் தயாராகும் 'சிரிக்க விடலாமா'
1 mins read
-

