கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று'

கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று'

1 mins read
3870c0a3-5ec3-4094-b783-1ac39452a52c
-

கார்த்தியின் புதிய படத்தை ராஜஸ் தானில் படமாக்க உள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. 'சிறுத்தை' படத்தில் முதன்முத லாக போலிஸ் அதிகாரியாக வந்த கார்த்தி, இப்போது 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் மீண்டும் போலிஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதை 'சதுரங்க வேட்டை' வினோத் இயக் குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு 3 நாட்கள் சென்னையில் நடந்தது. வருகிற 14ஆம் தேதி முதல் 2ஆம் கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் தொடங்குகிறது. மார்ச் 29ஆம் தேதி வரை அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். போலிஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் இங்குதான் படமாக உள்ளன.