விஜய் ஆண்டனி படம் என்றாலே தலைப்பு வித்தியாச மாக இருக்கும். அந்த வகையில் அவர் தற்போது நடிக்கும் படம் 'எமன்'. இப்படத்தில் அவர் அராஜகமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக நடிப்பவர் மியா ஜார்ஜ். 'நான்' படத்தை இயக்கிய ஜீவா சங்கர் தான் இப்படத்தையும் இயக்குகிறார். அண்மையில் வெளியான 'எமன்' படத்தின் முன்னோட்டம் சமூகவலைத்தளங்களில் பெரும் வர வேற்பைப் பெற்றுள்ளது. விரைவாக 'யூடியூபி'ல் மட்டுமே ஆறு லட்சம் பேர் இப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்து பாராட்டி உள்ளனர். இதனால் உற்சாகத்தில் இருக்கிறாராம் இயக்குநர் ஜீவா சங்கர்.
அராஜக அரசியல்வாதியாக விஜய் ஆண்டனி நடிக்கும் 'எமன்'
1 mins read

