விக்ரம் பிரபு: உண்மைக் கதைகள் நிச்சயம் வெற்றி பெறும்

விக்ரம் பிரபு: உண்மைக் கதைகள் நிச்சயம் வெற்றி பெறும்

1 mins read
814d5ead-d0e3-4b7b-bb5e-1ee2dcee64b4
-

திருச்சியில் நடந்த உண்மைக் கதை 'சத்ரியன்' என்ற பெயரில் படமாக்கப் படுகிறது. 'இதயம்', 'கிழக்குவாசல்', 'பகல் நிலவு', 'மூன்றாம் பிறை' போன்ற வெற்றிப் படங்களைத் தந்த சத்ய ஜோதி நிறுவனம் தயாரிப்பில், எஸ்.ஆர். பிரபாகரன் இயக்க, விக்ரம் பிரபு நடிக்கும் படம் 'சத்ரியன்'. இதில் விக்ரம் பிரபு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். இவர் களுடன் ஐஸ்வர்யா தத்தா, கன்னட நடிகை தாரா, சரத்லோகி தஸ்வா, அருள்தாஸ், ஆர்.கே.விஜய்முருகன், உள்பட பலர் நடிக்கிறார்கள்.

"உண்மைச் சம்பவங்களை அடிப் படையாகக் கொண்டு, திருச்சி பின் புலத்தில் இந்தக் கதை எழுதப் பட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருச்சியிலேயே படமாக்கப் பட்டு படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

'சத்ரியன்' படத்தில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன்.