ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய அனு‌ஷ்கா

ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திய அனு‌ஷ்கா

1 mins read
20225ce7-958b-490c-b714-88ff1d507375
-

'பாகுபலி 2' படத்தின் 'போஸ்டர்' அண்மையில் வெளிவந்தது. அதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் அனுஷ்கா மீண்டும் ஒல்லியாகிவிட்டார் என்று அளவிலா மகிழ்ச்சி அடைந்தனர். தற்பொழுது அவருடைய நடிப்பில் வெளிவந்திருக்கும் 'சிங்கம் 3' படத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். அவரை ஆசையுடன் பார்க்கச் சென்ற ரசிகர்கள் படத்தில் அவர் 'ஆன்ட்டி' மாதிரி குண்டாக இருந்ததால் மனம் வெறுத்துப்போய் திரும்பினர் என்று கூறுகிறது கோடம்பாக்கம். 'பாகுபலி 2' படத்தில் அனுஷ்கா இடம்பெற்ற போஸ்டரை படக் குழுவினர் கடந்த மாதம் வெளியிட்டபோது டோலிவுட் அந்த போஸ்டர் குறித்து பல வகையாக கிண்டல் செய்து செய்திகள் வெளியிட்டது. அனுஷ்காவின் தோற்றத்தை 'ஃபோட்டோஷாப்' மூலம் ஒல்லியாக மாற்றியிருக்கிறார்கள் என்று செய்திகள் வெளிவந்தன.