திருநங்கைகளுக்காக ஒரு காணொளி

1 mins read
a41989b0-bbdf-4af9-8e57-cbd373d08210
-

திருநங்கைகளுக்காக இயக்குநர் கிருத்திகா உதயநிதி (படம்) இசைக் காணொளி ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளார். 'வணக்கம் சென்னை' படத்தின் வெற்றிக்குப் பிறகு, தற்போது சமுதாயத்தில் திருநங்கைகள் சந்தித்து வரும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு, 'சதையை மீறி' என்னும் இசைக் காணொளிப் பதிவை உருவாக்கி இருக்கிறார் கிருத்திகா. அவர் இயக்கி, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இந்த 'சதையை மீறி' காணொளிப் பாடலை இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டு உள்ளார்.