பிப்ரவரி 24ஆம் தேதி வெளியீடு காணும் 'எமன்'

பிப்ரவரி 24ஆம் தேதி வெளியீடு காணும் 'எமன்'

1 mins read
bc9677eb-757a-4f71-8a43-06b24296e913
-

ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'எமன்' திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'அமர காவியம்' படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நாயகனாக நடித்த 'எமன்' படத்தை இயக்கினார் ஜீவா சங்கர். லைக்கா நிறுவனம் தயாரித்த இப்படத்தில் மியா ஜார்ஜ், தியாகராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. 'யு' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாகப் படக்குழு அறிவித்துள்ளது. 'எமன்' பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாசன் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி. இதற்கு 'அண்ணாதுரை' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.