படபடப்பை உணரும் காஜல்

படபடப்பை உணரும் காஜல்

1 mins read
1e839a84-9fd1-4d60-8dc2-e846eb721887
-

காஜல் அகர்வால் 2007ல் வெளி யான தெலுங்கு 'லட்சுமி கல்யாணம்' படம் மூலம் தெலுங்குப் பட உலகில் காலடி வைத்தார். இந்தப் படத்தில் அவரை அறிமுகம் செய்து வைத்த வர் தெலுங்கு இயக்குநர் தேஜா. இந்நிலையில், 'நேனே ராஜு நேனே மந்திரி' படத்தில் ராணா ஜோடியாக நடிக்கிறார் காஜல். இதை இயக்குபவர் தேஜா. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தேஜா இயக்கத்தில் நடிப்பது உற்சாகத்துடன் கூடிய படபடப்பை அளித்துள்ளதாகச் சொல்கிறார் காஜல்.

"உண்மையைத்தான் சொல்கி றேன். என்னதான் பல படங்களில் நடித்திருந்தாலும், உங்களைத் திரை உலகில் அறிமுகம் செய்தவரின் இயக்கத்திலேயே மீண்டும் நடிப்ப தென்பது மகிழ்ச்சியுடன் கூடிய படபடப்பையும் ஏற்படுத்தும். "அத்தகையதொரு அனுபவம் எனக்கு இப்போது வாய்த்துள்ளது. இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்," என்கிறார் காஜல்.