மஞ்சப்பை ராகவா இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் படம் 'கடம்பன்'. இந்தப் படத்திற்காக கடந்த ஒரு வருடமாக ஆர்யா காட்டிற்குள் யானைகளுடன் நடித்து வருகிறார். படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர் இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தனர். இந்தப் படத்தை அவர் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். இந்த நிலையில் ஜெயம் ரவி 'வன மகன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இந்தப் படத்தைப் பற்றிய எந்தத் தகவலும் வெளிவரவில்லை. தற்பொழுது வெளியாகி இருக்கும் செய்தி ஆர்யாவிற்குத் தலையில் இடி விழுந்ததுபோல் இருக்கிறதாம்.
ஆர்யாவை முந்தும் ஜெயம் ரவி
1 mins read
-

