பெண் இயக்குநர் படத்தில் சிவகார்த்திகேயன்

பெண் இயக்குநர் படத்தில் சிவகார்த்திகேயன்

1 mins read
c4713e92-f6f5-40b3-b7af-1ceeb2ce88b8
-

சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் பெண் இயக்குநர் ஒருவருடன் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. மோகன் ராஜா இயக்கத்தில் 'வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ரஜினி நடிப்பில் கடந்த 1987ஆம் ஆண்டு வெளியான 'வேலைக்காரன்' படத் தலைப்பை மோகன் ராஜா கைப்பற்றியுள்ளார். சிவகார்த்திகேயன் பிறந்தநாளான பிப்ரவரி 17ஆம் தேதி அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டது. இப்படத்திற்குப் பிறகு பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுடன் இணைந்து நடிக்க உள்ளார். அதே நேரத்தில் 'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிகுமார் இயக்கத்திலும் நடிக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, 'இறுதிச்சுற்று' இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் இதை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg