பாலா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஜோதிகா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'தாரை தப்பட்டை' படத்தைத் தொடர்ந்து புதிய படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் பாலா. இதில் யுவன், புதுமுகம் பிரகதி நடிக்க இருப்பதாகப் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஆனால், அப்படம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் 'சி 3' படத்தை விளம்பரப்படுத்தும் பேட்டி ஒன்றில் "எப்போது மீண்டும் பாலா இயக்கத்தில் நடிப்பீர்கள்?" என்ற கேள்விக்கு "இதுகுறித்து அவருடன் பேசினோம். ஆனால், முதலில் ஜோதிகா நடிப்பில் ஒரு படம் இயக்கிவிட்டுத்தான் உன்னை வைத்துப் படம் இயக்குவேன் என்று பாலா கூறிவிட்டார்," என்று சூர்யா தெரிவித்திருந்தார். தற்போது இக்கூட்டணி உறுதியாகியுள்ளது. பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பதற்கு முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாம். இப்படத்தை சூர்யாவின் '2டி நிறுவனம்' தயாரிக்க உள்ளது.
பாலா இயக்கத்தில் நடிக்கும் ஜோதிகா
1 mins read
-

