திவ்யதர்‌ஷினியைப் பாராட்டிய தனுஷ்

திவ்யதர்‌ஷினியைப் பாராட்டிய தனுஷ்

1 mins read
fbb95853-9c38-4d67-9e2b-c4ac9c98b27f
-

ராஜ்கிரண் நாயகனாக நடித்து, தனுஷ் தற்போது இயக்கும் படம் 'பவர்பாண்டி'. இதில் இளம் வயது ராஜ்கிரணாக தனுஷ் நடிக்கிறார். இப்படத்தை தனுஷ் திறமையாக இயக்குவதைப் பலரும் பாராட்டி வருகிறார்கள். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்‌ஷினி இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அண்மையில் படமாக்கப்பட்டன. இதில் டிடியின் நடிப்பைப் பார்த்து வியந்த தனுஷ், தனது டுவிட்டர் பக்கத்தில் அவரைப் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

"எனது படத்தில் திவ்யதர்‌ஷினி கௌரவ வேடத்தில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அவர் நடித்த விதத்தைப் பார்த்து மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன். அருமை டிடி," என்று தனுஷ் பதிவிட்டுள்ளார். இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள திவ்யதர்‌ஷினி, "நன்றி சார். முகத்தில் மட்டும்தான் நம்பிக்கை. உள்ளே இதயம், லிவர், கிட்னி எல்லாம் டப்பா டான்ஸ்சிங் சார்," என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்: epaper.tamilmurasu.com.sg