பார்வையற்ற பெண்ணிற்கு பாடும் வாய்ப்பு

பார்வையற்ற பெண்ணிற்கு பாடும் வாய்ப்பு

1 mins read
638de554-8bda-4cea-8081-2892fe5a4540
-

தமிழ் திரையுலகில் பல புதிய கலைஞர்கள் அறிமுகமாகி தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் திறமையை வெளிக்காட்டும் பலரும் தங்களது அடுத்த அடியை தமிழ் திரையுலகில் பதிக்கிறார்கள். அந்த வரிசையில் சமூக வலைத்தளங்களில் தனது அழகான குரலை வெளிப்படுத்தியிருந்த ஜோதி என்ற பார்வையற்ற இளம் பாடகிக்கு ஜி.வி.பிரகாஷ் தனது இசையில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். தனது ஃபேஸ்புக் இணையத்தளத்தில் தன் குரலில் பாடிய பாடல்களை வெளியிட்டிருந்தார். இதைப் பார்த்து வியந்துபோன ஜி.வி.பிரகாஷ், தன்னுடைய 'அடங்காதே' படத்தில் ஒரு பாடல் பாட ஜோதிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். இந்தப் பாடல் பதிவு அண்மையில் நடைபெற்று முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பாடல் படத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்றும் கூறப்படுகிறது.