நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முகம் கொண்ட தனுஷ், இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் படம் இது. ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரசன்னா, சாயா சிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வித்யூலேகா ராமன் ஆகியோரும் உள்ளனர். தனுஷ், ரேவதி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். மூன்று கட்டமாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் முடிந்துள்ளது. ராஜ்கிரண் கேக் வெட்டி படப்பிடிப்பை முடித்து வைத்தார். ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டையொட்டி இப்படம் வெளியாகும் என ஏற்கனெவே அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனுஷின் வுண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தனுஷின் 'பவர் பாண்டி' படப்பிடிப்பு முடிந்தது
1 mins read
-