திரைப்படத் துறையினருக்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சமந்தா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கவுதம்மேனன் இயக்கிய 'ஏதே வெள்ளி போயின்டி மனசு' படத்தில் நடித்த நானிக்குச் சிறந்த நடிகருக்கான விருதும் சமந்தாவுக்குச் சிறந்த நடிகைக்கான விருதும் இப்படத்துக்கு இசையமைத்த இளையராஜாவுக்குச் சிறந்த இசையமைப் பாளருக்கான விருதும் கிடைத்தது. "2012ல் வெளிவந்த 'ஏதே வெள்ளி போயின்டி மனசு' படத்தின் கதை எனக்கு மிக வும் பிடித்திருந்தது. அப்படம் சரியாக ஓடவில்லை. எனி னும் அதில் நடித்த எனக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார் சமந்தா. ஆந்திர அரசு சார் பில் சிறந்த தெலுங்கு படங்கள், நடிகர்- நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர் களுக்கு ஆண்டு தோறும் நந்தி விருது கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சமந்தாவுக்கு நந்தி விருது
1 mins read
-

