சென்னை: ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருந்து வீணை காயத்ரி நேற்று விலகினார். அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனைச் சந்தித்த அவர், சசிகலா அணியில் தம்மை இணைத்துக்கொண்டார். கடந்த 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு இசை, நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்த ராக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் வீணை காயத்ரி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. காயத்ரி தவிர மேலும் இரு முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி உள்ளனர். நெல்லை மாவட்டம் செங்கேட்டை ஒன்றியச் செய லாளர் செல்லப்பா, கடையநல்லூர் தெகுதி பெதுக்குழு உறுப் பினர் ஹனீஸ் ஆகியேர் நேற்று சசிகலா அணிக்கு மாறினர்.
சசி அணிக்குத் தாவிய வீணை காயத்ரி
1 mins read
-

