நட்புக்காக சுவரொட்டியை வெளியிட்ட சிம்பு

நட்புக்காக சுவரொட்டியை வெளியிட்ட சிம்பு

1 mins read
390b6898-683c-4b35-b7d7-78d4ed9a2ab7
-

கதிர் நடிக்கும் படத்தின் முதல் தோற்றம் சுவ ரொட்டியை சிம்பு வெளியிட்டுள்ளார். நட்புக்காக இந்நிகழ்வில் பங்கேற்றாராம். 'மதயானைக் கூட்டம்', 'கிருமி', 'என்னோடு விளையாடு' ஆகிய மாறுபட்ட கதைக்களத்தை கொண்டு உருவான படங்களில் நடித்தவர் கதிர். இவருடைய ஒவ்வொரு படத்திலும் இவருடைய கதாபாத்திரம் தனித்துப் பேசப்படும். இதற்கிடையில், 'சிகை' என்கிற படத்தில் கதிர் பெண் வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில், கதிர் அடுத் ததாக ஒரு புதிய படத்தில் போலிஸ் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அப் படத்தின் சுவரொட்டியை வெளி யிடுமாறு சிம்புவிடம் கோரிக்கை வைக்க, நட்புக்காக உடனே அவர் சம்மதித்தாராம்.