பண மதிப்பிழப்பு நடவடிக்கை: திரைப்படமாக்கும் பாரதிராஜா

பண மதிப்பிழப்பு நடவடிக்கை: திரைப்படமாக்கும் பாரதிராஜா

1 mins read
371716ae-e80b-4ec1-8b76-0e02f9fb5e15
-

பிரபல பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'படை வீரன்'. புதுமுகம் அம்ரிதா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் தனா.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் பாரதிராஜா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். தேனி மாவட்டத்தைப் பின்னணி யாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை சுவரொட்டியை நடிகர் அரவிந்த்சாமி கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். இப்படத்தில் நடிப்பதுடன், பாரதிராஜா புதிய படம் ஒன்றையும் இயக்குகிறாராம். இதற்கு, 'நவம்பர் 8... இரவு எட்டு மணி' என்ற தலைப்பு சூட்டப்பட்டிருக்கிறது.