நார்வே பட விழா: சிறந்த நடிகராக விஜய் சேதுபதி தேர்வு நார்வேயின் தலைநகரான ஓஸ்லோவில், 8ஆவது நார்வே தமிழ் திரைப்பட விழா குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இவ்விழா வரும் ஏப்ரல் 27 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம்முறை சிறந்த நடிகராக விஜய் சேதுபதியும், சிறந்த நடிகையாக வரலட்சுமியும் தேர்வாகி உள்ளனர். 'ஜோக்கர்' சிறந்த படமாகவும் 'விசாரணை' படத்திற்காக வெற்றி மாறன் சிறந்த இயக்குநராகவும் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. டி.ராஜேந்தர் வாழ்நாள் சாதனை யாளர் விருது பெறுகிறார்.
நார்வே பட விழா: சிறந்த நடிகராக விஜய் சேதுபதி தேர்வு
1 mins read
-

