'கடைசி பெஞ்ச் கார்த்தி'

1 mins read
f0c2b50f-7c18-4d91-a8d1-d50896b0e4e4
-

'காதல் செய்ய விரும்பு', 'ஒரு காதல் செய்வீர்', 'வெல்டன்', 'திருரங்கா' ஆகியப் படங்களை இயக்கிய ரவி பார்கவன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். படத்திற்கு 'கடைசி பெஞ்ச் கார்த்தி' என்ற தலைப்பை சூட்டியுள்ளனர். படத்தின் நாயகன் பரத். நாயகி ருஹானி ஷர்மாவு. இப்படம் குறித்த சில விஷயங்களை அண்மைய செய்தியாளர் சந்திப்பில் பரத்தும், ரவி பார்கவனும் பகிர்ந்து கொண்டனர். "பள்ளியில் முன் வரிசையில் அமர்ந்தி ருப்பவர் நல்ல மாணவர் என்றும் கடைசி வரிசையில் இருப்பவர் சரியாகப் படிக்காதவர் என்றும் பலருக்கு ஓர் எண்ணம் இருக்கிறது. ஆனால் இது உண்மை இல்லை. "அதேபோல் தான் காதலும். தமிழில் காதல் என்று கூறும்போது தனி மரியா தையாக இருக்கிறது. அதுவே 'லவ்' என்று ஆங்கிலத்தில் கூறும்போது முக்கி யத்துவம் இருப்பதில்லை. இப்படி தமிழில் காதல், ஆங்கிலத்தில் 'லவ்' என்று சொல்வதற்கு இடையே நிறைய வித்தியாசம் இருப்பதாக இந்தக் காலத்தில் கருதப்படுகிறது. அதைத்தான் இப்படம் வெளிப்படுத்தும்.