இதயதெய்வத்தின் நினைவுகளுடன் கன்னடத்துப் பைங்கிளி

இதயதெய்வத்தின் நினைவுகளுடன் கன்னடத்துப் பைங்கிளி

1 mins read
4a43a44c-0a74-4acc-af96-7912c5e9fcc7
-

அஷ்வினி செல்வராஜ்

'திருடாதே' படப்பிடிப்பின்போது உடைந்த கண்ணாடித் துகள்கள் கீழே கிடப்பது தெரியாமல் அதன் மீது நடனமாடிக் கொண்டிருந்தார் அன்றைய புதுமுக நடிகையான சரோஜாதேவி. அதைக் கண்ட எம்.ஜி.ஆர், உடனே சரோஜாதேவியை அழைத்து, அவரது காலில் கசிந்த ரத்தத்தை துடைத்துவிட்டு காயத் திற்கு கட்டுபோட்டுவிட்டபோதே அவரது இதய தெய்வமாகிவிட்டார் எம்.ஜி.ஆர். "ஒரு அறிமுக நடிகைக்கு அப்படி உதவி செய்ய வேண்டும் என்ற அவசியம் அவ ருக்கு இல்லை. ஆனால், அவர் அவ்வாறு எனக்கு உதவியபோதே எனது இதயத்தில் தெய்வமாக இடம்பிடித்துவிட்டார். அதை நான் என்றுமே மறக்கமாட்டேன்," என்று மன நெகிழ்ச்சியுடன் கூறினார் பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளை வென்று திரைத்துறையில் தனக்கென முத்திரையைப் பதித்து உள்ள சரோஜாதேவி, 79.

முழுவிவரம்: epaper.tamilmurasu.com.sg