கணவருக்காக ஸ்ரீதேவி வேண்டுகோள்

கணவருக்காக ஸ்ரீதேவி வேண்டுகோள்

1 mins read
0e253c1e-682a-4ddc-b5cb-09a3c346cf71
-

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் டுவிட்டர் பக்கமும் மர்ம நபர்களால் 'ஹேக்' செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போனி கபூர் இதுகுறித்து காவல்துறையில், புகார் தெரிவித்துள்ளார். மேலும், அவரது கணக்கில் இருந்து ஒரு சில தகவல்களும் பகிரப்பட்டு வருகிறது. அதில், லக்னோவில் நடக்க உள்ள ஒரு நிகழ்ச்சிக்காக பணம் வசூலிப்பதாகக் கூறி, அவரது நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்களிடம் சுவரொட்டி ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் ஒரு கைபேசி எண் குறிப்பிடப்பட்டு, இந்த எண்ணின் பேடிஎம் கணக்குக்கு ரூ.5,000, ரூ.10,000 தொகையை அனுப்புங்கள்," என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி யாரும் பணம் அனுப்பி ஏமாந்துவிட வேண்டாம் என கணவர் சார்பாக ஸ்ரீதேவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.