இசையமைப்பாளர் இயக்கும் முதல் படம் 'ஒண்டிக்கட்ட'

இசையமைப்பாளர் இயக்கும் முதல் படம் 'ஒண்டிக்கட்ட'

1 mins read
dbded520-2e0e-4610-bc7d-a628cd08790c
-

இசையமைப்பாளர் பரணி இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கும் முதல் படம் 'ஒண்டிக் கட்ட'. பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக் கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர்களுடன் தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், சென் ரா யன், மதுமிதா ஆகியோரும் உள்ளனர். "இசையமைப்பாளராக 40 படங்களுக்கு மேல் பணியாற்றி உள் ளேன். 'பெரியண்ணா' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'பார்வை ஒன்றே போதுமே', 'சார்லி சாப்ளின்', 'சுந்தரா டிராவல்ஸ்' போன்ற படங்களின் பாடல்கள் எனக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை தந்தன. "ஒரு நல்ல கதை அமைந்ததால் `ஒண்டிக்கட்ட' படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறேன். ஓர் உண்மைக் கதையை நல்ல திரைக்கதையாக்கி, அதைப் படமாக்கி இருக்கிறோம். தையமுத்து, நல்லதம்பி, பஞ்சவர்ணம் என்ற 3 கதாபாத்திரங்கள்தான் கதையின் உயிர் நாடி," என்கிறார் பரணி.