முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் புதிய படம் 'சிரிக்க விடலாமா'. இதில் நிதின் சத்யா, பவர்ஸ்டார் சீனிவாசன், விநாயக் என மூன்று கதாநாயகர்கள். இவர்களுக்கு ஜோடியாக லீஷா, புதுமுக நாயகி சௌமியா, தீபா ஆகியோர் நடிக்கின்றனர். ஆனந்தராஜ், மகாநதி சங்கர், சந்தானபாரதி, கோவை செந்தில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். "ரசிகர்களை சிரிக்க வைப்பதே எங்கள் நோக்கம். அதைக் கச்சிதமாக செய்யப் போகிறோம்," என்கிறார் இயக்குநர் காவியன். படம் விரைவில் திரை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களை சிரிக்க வைக்கும் நோக்கத்துடன் உருவாகும் 'சிரிக்க விடலாமா'
1 mins read
-

